+2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்!

மார்ச் மாதம் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற இருப்பதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். பேப்பர்கள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு இபாஸ் தேவையில்லை அடையாள அட்டை மட்டும் போதுமானது என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தச் செல்லும் ஆசிரியர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. கொரோனோ பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் சமூக விலகலைக்
 

+2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்!மார்ச் மாதம் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற இருப்பதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.  பேப்பர்கள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு இபாஸ் தேவையில்லை அடையாள அட்டை மட்டும் போதுமானது என ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் விடைத்தாள் திருத்தச் செல்லும்  ஆசிரியர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

கொரோனோ பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களிலும்  சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மையத்திற்கு நுழையும் முன்னும், வெளியில் வரும் போதும் கிருமி நாசினி மூலம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் முன்பும் கைகளை சானிடைசர் மூலம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மையத்தில் பணிபுரியும் முழுநேரமும் ஆசிரியர்கள்  முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பொது இடங்களில் நடத்தப்படும் சுப, அசுப நிகழ்ச்சிகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பங்கேற்ககூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

A1TamilNews.com

From around the web