இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனம் இது தான்! வெளியானது புது தகவல்!

இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசை அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் எஜுகேஷன் வேர்ல்ட் என்ற அமைப்பு பட்டியலிடும். 2020-2021ம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது தேசிய அளவில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் முதலிடத்தில் இருக்கிறது. 2வது இடத்தில் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகமும், 3வது இடத்தில் டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகமும், 4வது இடத்தில் டெல்லி பல்கலைக்கழகமும் உள்ளன. இதற்காக இந்தியா
 

இந்தியாவின்  தலைசிறந்த உயர் கல்வி நிறுவனம் இது தான்! வெளியானது புது தகவல்!ந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசை அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் எஜுகேஷன் வேர்ல்ட் என்ற அமைப்பு பட்டியலிடும்.

2020-2021ம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது தேசிய அளவில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் முதலிடத்தில் இருக்கிறது.

2வது இடத்தில் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகமும், 3வது இடத்தில் டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகமும், 4வது இடத்தில் டெல்லி பல்கலைக்கழகமும் உள்ளன.
இதற்காக இந்தியா முழுவதும் உள்ள 162 உயர்கல்வி நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் பேராசிரியர்கள், மாணவர்கள், தொழில் பிரதிநிதிகள் இவர்களிடம் கருத்துக் கணிப்புக்களும், ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

இதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் பிரிக்கப்பட்டுள்ளது. கற்பிக்கும் முறைகள், மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், கற்றறியும் திறன், வேலைவாய்ப்புக்கள், உள்கட்டமைப்புக்கள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இவை அனைத்தும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படும்.

A1TamilNews.com

 

From around the web