இந்தியாவின் அசாதாரண பன்முகத் தன்மை பாராட்டுக்குரியது! இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் புகழ்ச்சி!

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியா குளோபல் வீக்2020 மாநாடு இங்கிலாந்தில் நேற்று துவங்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் நடக்க இருக்கும் இம்மாநாட்டில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தற்போதைய அசாதாரணமான சூழ்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மிகவும் சவாலான காரியம். உலகளாவிய மதிப்பை உருவாக்கவும், மக்களை அதில் பங்கேற்கச் செய்யவும் இன்னும் கடுமையாகப் போராட நேரிடும். இதில்
 

இந்தியாவின் அசாதாரண பன்முகத் தன்மை பாராட்டுக்குரியது! இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் புகழ்ச்சி!சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியா குளோபல் வீக்2020 மாநாடு இங்கிலாந்தில் நேற்று துவங்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் நடக்க இருக்கும் இம்மாநாட்டில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

தற்போதைய அசாதாரணமான சூழ்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மிகவும் சவாலான காரியம். உலகளாவிய மதிப்பை உருவாக்கவும், மக்களை அதில் பங்கேற்கச் செய்யவும் இன்னும் கடுமையாகப் போராட நேரிடும்.

இதில் இந்தியாவின் பண்டைய அறிவை உலகம் முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் தத்துவமும் மதிப்புகளும் நிலையான வாழ்க்கை முறையையும் மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கமான உறவை வலியுறுத்தியுள்ளன.

இந்தியாவின் பண்டைய ஞானத்தின் உதாரணங்களிலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ளலாம். நாம் உலகின் பொருளாதார மாதிரியை மீண்டும் கட்டமைக்க பார்க்கும்போது பசுமையான மற்றும் சமமானதாக இருப்பதற்கு, இது போன்ற முற்றிலும் இன்றியமையாத விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது மிக முக்கியம்.

இந்தியாவில் தரமான கல்வி மற்றும் சுகாதார சேவையை வழங்குவதற்காக முன்னணியில் பணியாற்றி வரும் இந்திய புலம்பெயர்ந்தோர், பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்களுடன் சமூக நிதியை பயன்படுத்துவதற்கு, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.

இந்தியாவின் அசாதாரண பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றல் மற்றும் புத்தி கூர்மை மற்றும் விடாமுயற்சி ஆகியவை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளன என இந்தியாவிற்கு புகழாரம் சூட்டினார் பிரிட்டன் இளவரசர் சார்லஸ்.

A1TamilNews.com

From around the web