‘பிஞ்ச் ட்ரிங்கிங்’ கல்லீரலுக்கு கேரண்டி இல்லே! அமெரிக்க இந்தியரின் ஆராய்ச்சித் தகவல்!

பிஞ்ச் ட்ரிங்கிங் பழக்கம் கல்லீரலை கடுமையாகப் பாதிக்கும் என்று எலிகள் மீது நடத்திய சோதனைகள் மூலம் கண்டுபிடித்துள்ளார் அமெரிக்க இந்திய ஆராய்ச்சியாளர் சிவேந்திரா சுக்லா. மிசோரி மாநிலம் கொலம்பியா நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மிசோரியில், விரிவுரையாளராக பணியாற்றும் முனைவர். சிவேந்திரா சுக்லாவின் இந்த கண்டுபிடிப்பு Journal of Pharmacology and Experimental Therapeutics – ல் வெளியாகியுள்ளது. நான்கு ஆண் எலிகள் மற்றும் நான்கு பெண் எலிகளுக்கு 12 மணி நேர இடைவெளியில் மூன்று தடவை
 
‘பிஞ்ச் ட்ரிங்கிங்’ கல்லீரலுக்கு கேரண்டி இல்லே! அமெரிக்க இந்தியரின் ஆராய்ச்சித் தகவல்!
Shivendra D. Shukla, PhD, Medical Pharmacology and Physiology.

பிஞ்ச் ட்ரிங்கிங் பழக்கம் கல்லீரலை கடுமையாகப் பாதிக்கும் என்று எலிகள் மீது  நடத்திய சோதனைகள் மூலம் கண்டுபிடித்துள்ளார் அமெரிக்க இந்திய ஆராய்ச்சியாளர் சிவேந்திரா சுக்லா.

மிசோரி மாநிலம் கொலம்பியா நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மிசோரியில், விரிவுரையாளராக பணியாற்றும் முனைவர். சிவேந்திரா சுக்லாவின் இந்த கண்டுபிடிப்பு Journal of Pharmacology and Experimental Therapeutics – ல் வெளியாகியுள்ளது.

நான்கு ஆண் எலிகள் மற்றும் நான்கு பெண் எலிகளுக்கு 12 மணி நேர இடைவெளியில் மூன்று தடவை ஆல்கஹால் கொடுத்து சோதனை செய்துள்ளார்கள். இதில் ஆண் எலிகளை விட, பெண் எலிகளின் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு பெண் எலிக்கு 4 மடங்கு அதிகமாக இருந்துள்ளது. கல்லீரலும் பெரிய அளவில் வீக்கம் அடைந்துள்ளது. கேன்சரை உருவாக்கும் Diacylglycerol Kinase-alpha (DGKa) என்ற புரோட்டீன் அளவு 20 சதவீதம் ஆண் எலிகளுக்கு அதிகரித்துள்ளது. அதே புரோட்டீன் அளவு 95 சதவீதம் பெண் எலிகளுக்கு அதிகமாகியுள்ளதாக சிவேந்திரா சுக்லா கூறியிருக்கிறார்.

அதென்ன ‘பிஞ்ச் ட்ரிங்கிங்’ ?.  அதிகப்படியான ஆல்கஹால் குடிக்கும் பழக்கத்தைத் தான் பிஞ்ச் ட்ரிங்கிங் என்று மருத்துவத் துறையில் குறிப்பிடுகிறார்கள்.  இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு ஆண் 5 , பெண் 4 ட்ரிங்க் ஆல்கஹால் குடித்தால் அதை பிஞ்ச் ட்ரிங்கிங் என்று கணக்கிடுகிறார்கள். 

அமெரிக்காவில் பெரியவர்களில் ஆறில் ஒருவர் மாதத்திற்கு நான்கு தடவையாவது பிஞ்ச் ட்ரிங்கிங் செய்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் 7 ட்ரிங், அதாவது 2 மணி நேரத்திற்குள் 7 லார்ஜ் என்று வைத்துக் கொள்ளலாம், குடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த பிஞ்ச் ட்ரிங்கிங் மூலம் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்படும், கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எலிகள் மூலம் நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார் சிவேந்திரா சுக்லா. பெண் எலிகளுக்கு பல மடங்கு பாதிப்பு என்றும் கூறியுள்ளர்.

எலிகள் மீது நடத்திய ஆராய்ச்சி மனிதர்களுக்கு அப்படியே பொருந்துமா?. பல ஆராய்ச்சிகள் முதலில் எலிகள் மீது தானே நடத்தப்படுகின்றன?.  “குடி குடியைக் கெடுக்கும்” என்பதை பட்ட பிறகு தெரியாமல், வரக்கூடிய நோய்களை முன்னதாகவே தெரிந்து கொள்வதற்கு இத்தகைய ஆராய்சி முடிவுகள் உதவும் தானே!

A1TamilNews.com

 

From around the web