பெண் போலீஸ் மீது 21 இடங்களில் கத்திக்குத்து... கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

 
Delhi-Police

பெண் போலீசார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி போலீசின் குடிமை பாதுகாப்பு பிரிவில் தன்னார்வலராக பணியாற்றி வந்தவர் சபியா சைஃபி. 21 வயது மதிக்கத்தக்க இவர், கடந்த 26-ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். ஆனால், வெகு நேரம் ஆகியும் விடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர் அவருடைய போனுக்கு தொடர்பு கொண்ட போது, போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது.

இந்நிலையில் காணாமல் போன சைஃபி, சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடலின் பல இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தி, மார்பகம் அறுக்கப்பட்ட கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Sabiya-Saifi

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தியதில், அவருடைய காதல் நிஜாமுதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது நிஜாமுதீனிடம் நடத்திய விசாரணையின் போதுநான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர், இரண்டு பேரும் பல வருடங்களாக காதலித்தோம். பெற்றோர் சம்பதிக்காததால், வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சபியா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்தது. இந்நிலையில் சபியாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததால் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்று கொலை செய்தாக தெரிவித்துள்ளார்.

Sabiya-Saifi

இந்நிலையில், கொலையை நியாயப்படுத்தும் வகையில், தனது மகளின் மீது வீண்பழிப்போடுகிறார்; எனது மகளை நிஜாமுதீன் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சபியா தாயார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள பொதுமக்களும், சிறுபான்மையினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுத்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் #JusticeForSabiya என ஹேஷ்டேக்கிலும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web