குஜராத்தின் புதிய முதல்வர் யார்..? ராஜினாமா செய்த பின் விஜய் ரூபானி பேட்டி

 
Vijay-Rupani

குஜராத் முதல்வராக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த கட்சி தலைமை, பிரதமருக்கு நன்றி என விஜய் ரூபானி கூறியுள்ளார்.

182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி 2016 முதல் குஜராத் முதல்வராக இருந்து வந்தார்.

அங்கு ஆனந்தி பென் படேலுக்கு பிறகு அவர் முதல்வர் ஆனார். இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

Vijay-Rupani

பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

குஜராத் முதல்வராக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த கட்சி தலைமை, பிரதமருக்கு நன்றி. என்னை வழிநடத்திய கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய செயல்பாட்டுக்கு புதிய தலைமை தேவைப்படும். மக்களுக்கு சேவை செய்ய பாஜக எப்போதும் வாய்ப்பு வழங்கி வருகிறது. குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என விஜய் ரூபானி கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web