ஏர் இந்தியா விமானம் நடைமேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய கொண்டதா.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

 
Delhi

டெல்லியில் ஏர் இந்தியா விமானம் மேம்பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி-குர்கான் நெடுஞ்சாலையில் தலைநகரின் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஏர் இந்தியா விமானம் சாலையின் ஒரு ஓரத்தில் மேம்பாலத்தின் கீழ் சிக்கி கொண்டிருப்பதையும், வாகங்கள்அதனை கடந்து செல்வதையும் 40 வினாடிக்கான அந்த வீடியோவில் காணலாம். விமானம் சாலையில் நடு பகுதியில் சிக்கியிருப்பதைக் காணலாம்.

பாலத்தின் அடியில் விமானம் சிக்கிய வீடியோ வைரலான பிறகு, இது குறித்து கருத்து தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனம், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் பழைய விமானங்களை அப்புறப்படுத்தும் ஸ்கிராப் திட்டத்தில் அப்புறப்படுத்தப்பட்ட விமான என்றும் விமான நிறுவனம் உறுதி செய்தது. விமானத்தை ஏர் இந்தியாவிடம் இருந்து வாங்கிய அதன் புதிய உரிமையாளர் அதனை கொண்டு செல்வதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


“இது பழைய, உபயோகிக்கப்படாத அப்புறப்படுத்தப்பட்ட விமானம், இதனை ஏற்கனவே நாங்கள் விற்றுவிட்டோம். இது யாருக்கு விற்கப்பட்டது என்பது சம்பந்தமான கூடுதல் தகவல் இல்லை” என்று தனியார் பத்திரிக்கை ஒன்றிடம் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தின் கடற்படைக்குச் சொந்தமானது அல்ல. இது ரத்து செய்யப்பட்ட விமானம். இதை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் போது இந்த தவறு நடந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

From around the web