பிரேத பரிசோதனை தொடர்பாக கேள்வி எழுப்ப ராகுல் காந்தி என்ன மருத்துவரா? பாஜக குற்றச்சாட்டு

 
Sambit-Patra

லகிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் லகிம்பூரில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக செய்தி தொடர்பாளர்  சம்பித் பத்ரா, உத்தர பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து சம்பித் பத்ரா மேலும் கூறுகையில், “விவசாயிகள் இறந்த விவகாரத்தை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். லகிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உத்தர பிரதேச அரசு விசாரணை தொடங்க முடிவு செய்துள்ளது. பிரேத பரிசோதனை தொடர்பாக கேள்வி எழுப்ப ராகுல் காந்தி என்ன மருத்துவரா? காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் விவசாயிகள் மீது நடந்த தடியடி பற்றி ராகுல் காந்தி ஏன் கேள்வி கேட்கவில்லை?” என்றார்.

From around the web