கொரோனா வந்தா என்ன செய்வீங்க! தமிழிசை சவுந்தரராஜனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெரியவர்!!

 
கொரோனா வந்தா என்ன செய்வீங்க! தமிழிசை சவுந்தரராஜனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெரியவர்!!

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், கொரோனா தடுப்பூசி நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.

தடுப்பூசி போடப்படும் மையத்திற்குப் பார்வையிடச் சென்ற போது வழியில் ஒரு பெரியவரைப் பார்த்து பேச்சுக் கொடுத்தார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

கொரோனா வந்தா என்ன செய்வீங்க என்று அக்கறையாகக் கேட்ட தமிழிசைக்கு அந்தப் பெரியவர் சொன்ன பதில் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

“போய் சாவப் போறன். இப்ப இருந்து என்னத்த பண்ணப் போறேன்” என்று ரொம்பவும் கூலாகப் பெரியவர் பதில் சொல்லவும், என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறிவிட்டார் தமிழிசை. அங்கிருந்து அவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு காத்திருக்கும் இடம் என்று அழைத்துச் சென்றனர் அதிகாரிகள்.

எல்லோரும் தடுப்பூசி போட்டுட்டீங்களா என்று கேட்கவும், இல்லே மேடம் இனிமேத்தான் போடப்போறேன் என்று பதில் சொல்லவும், அதிகாரிகள் சொன்ன தகவலுக்கு மாறாக இருந்ததும் தமிழிசைக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சமாளித்துக் கொண்டு, எல்லோரும் சந்தோசமா தடுப்பூசி போடுங்க. நானும் போட்டிருக்கேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

இந்த நிகழ்வை வீடியோ எடுத்து சமூகத்தளங்களில் பரப்பி வருகின்றனர் நெட்டிசன்ஸ். அதில் பின்னணியில் கூட்டம் குறைவாகத் தான் இருக்கு என்ற ஆதங்கமான குரலும் பதிவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு என்று அறிவித்து விட்டு கூட்டத்தை எதிர்பார்த்தால் எப்படிங்க?

From around the web