மேற்கு வங்காள கூட்டணி சரியில்லையாமே! கம்யூனிஸ்டுகள் கூட்டத்தில் ஒரு அதிருப்தி குரல்!!

 
மேற்கு வங்காள கூட்டணி சரியில்லையாமே! கம்யூனிஸ்டுகள் கூட்டத்தில் ஒரு அதிருப்தி குரல்!!

மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,காங்கிரஸ், , இந்திய செக்குலர் முன்னணி  கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. புர்புராஷெரிப் முஸ்லீம் மதகுரு அபபாஸ் சித்திக் தொடங்கிய கட்சி தான் இந்தியன் மதசார்பற்ற அணி.

பாஜகவை குறைத்து மதிப்பிட்டு சிபிஎம் , மம்தா பானர்ஜியை  மட்டும் குறிவைத்து காய் நகர்த்துகிறது. சிபிஎம் அமைத்தவுள்ளது குறுகிய கண்ணோட்டத்தில் தற்கொலைக்கு ஒப்பான கூட்டணி. மம்தா அரசுக்கு எதிரான நிலவரம் மட்டுமே பாஜக வளர்ச்சிக்கு காரணம் அல்ல. மம்தா ஆட்சிக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்தும் சிபிஎம் வாக்கு வாங்கி சரிந்து வருகிறது.சிபிஎம் ஆதரவாளர்கள் பாஜக பக்கம் சென்றுகொண்டு இருக்கிறார்கள்.

சிபிஎம் கொள்கை சரியாக இருந்தால் இப்படி நடக்காது. பாஜக ஆட்சியை பிடித்தாலும் பரவாயில்லை , மம்தாவை அகற்ற வேண்டும் என்று சிபிஎம்  வேலை செய்கிறது. சிபிஎம் கூட்டணியின் பேரணியில் பேசிய  அபபாஸ் சித்திக் , பாஜகவை திட்டத்திட்ட  ஐ எஸ் எப்  வளரும் என அறிவித்தார். நீண்ட அரசியல் அனுபவம் உள்ள சிபிஎம், சித்திக் கட்சிக்கு 37  தொகுதிகளை  ஒதுக்கியது வியப்பாக உள்ளது என்று  சிபிஐ [ எம் எல் ]பொது செயலாளர் டிபன்கர் பட்டாச்சார்யா  கூறியுள்ளார்.

சிபிஎம் கூட்டணி வென்றால் ஆட்சியிலும்  பங்கேற்போம் என சித்திக் முழங்கியுள்ளார். மதசார்பின்மை என்பது அரசியல்வாதிகளின் வசதிக்கேற்ப  சாயம் ஏற்றப்படுகிறது. வரம் கொடுத்த ஈசன் தலையிலேயே கைவைக்க முற்பட்ட பத்மாசுரன் போல தேசிய கட்சிகளின் தலையில் மதச்சார்பு கட்சிகள் கைவைக்கும் நிலை வரும்.  இதைத்தான்  சிபிஐ [ எம் எல் ] டிபன்கர்  பட்டாச்சார்யா எச்சரிக்கிறார்.

-வி.எச்.கே. ஹரிஹரன் 

News Hub