தண்ணீர் தொட்டியா..? குவியல் குவியலாக 500 ரூபாய் நோட்டுகள்.. மிரண்டுபோன வருமான வரி அதிகாரிகள்!!

 
Shankar-Rai-IT-raid
மத்தியப் பிரதேச தொழிலதிபர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சங்கர் ராய். இவ்வாறு அங்கு பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். இருப்பினும், இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்து.
 
அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சங்கர் ராய்க்கு சொந்தமான வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் அவரது வீட்டில் பல்வேறு இடங்களிலும் பணத்தைப் பதுக்கி வைத்துப்பதை கண்டு அதிகாரிகளே மிரண்டு போய்விட்டனர். குறிப்பாக வாட்டர் டேங்கில் கூட சுமார் ஒரு கோடி ரூபாயை அவர் பதுங்கி வைத்துள்ளதைக் கண்டு அதிகாரிகள் ஷாக் ஆகிவிட்டனர்.


மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் சங்கர் ராய்க்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் திரைப்படங்களில் வருவதைப் போல நிலத்தடி நீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்த பையையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் இருந்து மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் சுமார் கட்டுகட்கான 500 ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் உலர்த்துகின்றன,
 
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மொத்தம் 8 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதேபோக 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக இணை ஆணையர் முன்முன் சர்மா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை மொத்தம் 39 மணி நேரம் நீட்டித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.

IT-raid-in-shankar-rai-home

சங்கர் ராய் காங்கிரஸ் ஆதரவுடன் தாமோ நகர் பாலிகா பகுதியின் தலைவராக இருந்தனர். அவரது சகோதரர் கமல் ராய் இதற்கு முன்பு பாஜக ஆதரவுடன் தாமோ நகர் பாலிகாவின் துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர் ராய் தனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் பெயரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி வந்ததா வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். வேறு இடங்களில் சங்கர் ராய் பதுங்கி வைத்துள்ள சொத்துக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ 10,000 அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி சோதனை முடிந்துவிட்ட போதிலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

From around the web