உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் வன்முறை... பெண் வேட்பாளர் மானபங்கம்!!

 
Uttar-Pradesh

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி பெண் தொண்டர் ஒருவரை சேலை இழுத்து மானபங்கப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மனு தாக்கல்கள் முடிந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி பெண் தொண்டர் ஒருவரை சேலை இழுத்து மானபங்கப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று  825 தொகுதி உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களுக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு 12-க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளது.

லக்னோவிலிருந்து 130 கி.மீ தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் நடந்த மோதலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த  பெண் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டு உள்ளார்.

அந்த பெண் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேட்மனு தாக்கல் செய்ய வந்துள்ளார். அவர் மற்றொரு கட்சி வேட்பாளர் மற்றும் அவரது ஆட்களால் தாக்கப்பட்டு உள்ளார். அவர்கள் அந்த பெண்ணை சரியான நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்து உள்ளனர்.மேலும் அந்த பெண்ணின் சேலையை உருவி மானபங்கப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டு உள்ள ட்வீட்டில் தாக்கியவர்கள்  பாஜக தொண்டர்கள் என்றும்
யோகி ஆதித்யநாத்தின் பதவி ஆசை கொண்ட குண்டர்கள் எனவும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவும் வன்முறை வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு டேக் செய்து “பிரதமர் மற்றும் முதல் மந்திரி  வெடிகுண்டுகள், கற்கள் மற்றும் தோட்டாக்களை பயன்படுத்திய  உ.பி.யில் உள்ள உங்கள் தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள், அவர்கள் வேட்பு மனுக்களை பறித்து பத்திரிகையாளர்களை அடித்து, பெண்களுடன் தவறாக நடந்து கொண்டார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு  ஜனநாயகம் சீர்குலைந்து வருகிறது என்று பிரியங்கா காந்தி இந்தியில் டுவீட் செய்துள்ளார்.

இதுகுறித்து உத்தரபிரதேச போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் கூறியதாவது,

வேட்புமனு தாக்கல் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 14 பகுதிகளில் இருந்து வன்முறைகள் பதிவாகியுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக,உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் பாஜக 75 இடங்களில்  67 இடங்களை வென்றது. சமாஜ்வாதி கட்சி ஐந்து இடங்களை மட்டுமே வென்றது. ராஷ்டீரிய லோக் தளம், ஜான்சத்தா தளம் மற்றும் ஒரு சுயேச்சை  வேட்பாளர் தலா ஒரு இடத்தை வென்றனர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

From around the web