நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை பெருக்கம் பெரும் தடையாக உள்ளது - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

 
Yogi-Adityanath

மக்கள் தொகை பெருக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, 2021-2030 ஆண்டுக்கான மாநில மக்கள்தொகை கொள்கை திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்  தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது,

மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது. இதனை அனைத்து சமூகங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இதனை முன்னிறுத்தியே மக்கள் தொகை கொள்கை திட்டம் 2021- 2030 உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மக்களும் உணர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web