இன்று அறுவடைத் திருநாள்! வேற்றுமையில் ஒற்றுமை ஓங்கட்டும்!!

 
Pongal

இந்திய நாட்டில் மக்கள் வாழும் வெவ்வேறு 
பகுதிகளுக்கேற்ப, தட்பவெப்ப நிலைக்கேற்ப, வரலாற்றிற்கேற்ப, புவியியலுக்கேற்ப 

தமிழ், துளு, கன்னடம், மலையாளம், தெலுங்கு 
பஞ்சாபி இப்படி இன்னும் 
பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன 

தை பொங்கல், மகர சங்கராந்தி, லோஹ்ரி, 
ஈகை திரு நாள், ஈஸ்டர் இப்படி இன்னும் 
பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன 

ஏசு, அல்லா, சிவன், காளி 
இப்படி இன்னும் 
பல்வேறு கடவுள்கள் வழிபடப்படுகின்றன 

பல்வேறு பழக்கவழக்கங்கள் 
கடைபிடிக்கப்படுகின்றன  

பல்வேறு வாழ்க்கைமுறைகள் 
செயல்படுத்தப்படுகின்றன  

பல்வேறு உணவுவகைகள் 
உண்ணப்படுகின்றன 

பல்வேறு உடை வகைகள் 
அணியப்படுகின்றன 

பல்வேறு மரபு கலாச்சாரம் பண்பாடு 
போன்றவை பின்பற்றப்படுகின்றன  

பல்வகை இசை வகைகள் பாடப்படுகின்றன 
பல்வகை நடனக் கலைகள் ஆடப்படுகின்றன 
பல்வகை இலக்கியங்கள் இதிகாசங்கள் 
பக்தி நூல்கள் இயற்றப்பட்டுள்ளன 
பல்வகை இசைக் கருவிகள் வாசிக்கப்படுகின்றன
பலநூறு கலைகள் போற்றப்படுகின்றன 

Pongal

ஆனால் அரசியல் பிழைப்புக்காகவும் 
அதிகார மோகத்திற்காகவும்  
இந்த பேதமற்ற வேற்றுமைகளை 
மக்கள் மீது வெறுப்பாக திணித்து 
ஒருவகை அச்சத்தை அவர்களில் உண்டாக்கி  
பிரித்தாள செயல்படும் கூட்டங்கள் 
இந்தியாவில் பல்வேறு பெருகியுள்ளன 
 
இப்படிப்பட்ட சுயநலக் கூட்டங்கள் 
நாட்டையும் மாநிலத்தையும் மக்களையும் 
கூறு போட செயப்பட்டாலும் 
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு 
மனிதம் தொலைக்காமல் வாழ 
நம் மக்கள் முயல்வது 
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் 
ஒருவரையொருவர் வாழ்த்தி
தின்பண்டங்கள் மாற்றி உண்டு
மகிழ்வது நம் நாட்டின் தனிச்சிறப்பு 

இன்று அறுவடைத் திருநாள் 
தாய் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பலவேறு 
பெயர்களில் கொண்டாடப்படுகின்றது. 

இந்த நாள்
நம் தாய்த்திரு நாட்டில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் பொங்கலாக பொங்கி வழியட்டும்  

இந்த நாளில் 
நம் தாய்த்திரு நாட்டில் வாழும் அனைத்து 
உறவுகளின் மனங்களிலும் திகட்டாத மகிழ்ச்சி 
பூத்து குலுங்கட்டும் 

இந்த நாளில் 
நம் தாய்த்திரு மண்ணில் 
மனிதம் எனும் ஒளி, வெறுப்பு எனும் இருள் விரட்டி 
அமைதி எனும் மதத்தை எங்கும் நிலைத்து வாழ வழி அமைக்கட்டும். 

அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள் 

புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

From around the web