ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த நபர்... காலால் எட்டி உதைத்த போலீஸ்...!

 
Kerala-Cop-Kicks-Passenger-Travelling-Without-Ticket

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த நபரை போலீஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த நபரை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கர்நாடகாவின் மங்களூரூவில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு தினமும் மாவெளி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகளின் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக ரயில்வே அதிகாரி, ரயில்வே போலீஸ், கேரள போலீஸ் என 3 பேர் கன்னூர் ரயில் நிலையத்தில் வைத்து மாவெளி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளனர்.

ஒவ்வொரு பயணியிடமும் டிக்கெட் பரிசோதனை செய்துகொண்டிருந்தபோது ஒரு நபரிடம் ரயில்வே அதிகாரி பயண டிக்கெட்டை காண்பிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர் தனது டிக்கெட்டை காண்பிக்கவில்லை. அந்த நபர் டிக்கெட் எடுக்கவில்லை என்பதை ரயில்வே அதிகாரி, போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், அந்த நபர் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டிக்கெட் இல்லாமல் பயணித்ததால் ஆத்திரமடைந்த போலீஸ் அந்த நபரை தனது காலால் எட்டி உதைத்தார். இதில், அந்த நபர் சரிந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக பயணிகள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதையடுத்து ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த நபரை தனது காலால் எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர்.

இதனையடுத்து, ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த நபரை காலால் உதைத்த கேரள போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்த போலீஸ் அதிகாரியுடன் சென்ற ரயில்வே அதிகாரி, ரயில்வே போலீஸ் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

From around the web