கை பம்ப்பை அடித்து, நீரை வீணாக்காமல் குடிக்கும் யானை..! டிவிட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்த ஜல்சக்தி அமைச்சகம்

 
JalShakti

கை பம்ப்பை அடித்து அதில் இருந்து கொட்டிய நீரை வீணாக்காமல் ஒரு யானை அருந்தும் வீடியோவை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம் பகிர்ந்துள்ளது.

நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஜல்சக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் தாகத்தை தணிக்கும் அளவுக்கு மட்டும் யானை பம்ப் அடித்து அதிலிருந்து கொட்டிய நீரை குடிக்கிறது.

“ஒரு யானைக்குக் கூட ஒவ்வொரு துளி நீரின் முக்கியத்துவம் குறித்து தெரிந்திருக்கும் நிலையில், ஏன் மனிதர்கள் விலைமதிப்பற்ற நீர் ஆதாரத்தை வீணடிக்கின்றனர்?” என்று ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.


 

From around the web