காதலியை பழிவாங்க ‘கால்கேர்ள்’ என புகைப்படத்தோடு பதிவிட்ட காதலன்..! அதிர்ச்சியில் முன்னாள் காதலி!!

 
Dilip-Jain

முன்னாள் காதலி பெயரில் போலியான சமூகவலைதள பக்கத்தை தொடங்கிய நபர் செய்த அதிர்ச்சி செயல்கள் அம்பலமாகியுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் திலிப் ஜெயின் (வயது 45). இவர் 29 வயதான இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து தனது காதலியை பழிவாங்க முடிவெடுத்த திலிப் ஃபேஸ்புக்,
இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அந்தப் பெண்ணின் பெயரில் போலி கணக்கு திறந்து அதில் அப்பெண்ணை கால்கேர்ள் எனக் குறிப்பிட்டதோடு அவரது மொபைல் நம்பரையும் பதிவிட்டார்.

மேலும் காதலித்த போது எடுத்து கொண்ட வீடியோவையும் வெளியிட அப்பெண்ணுக்கு போன் கால்கள் தொடர்ந்து வந்துள்ளது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் திலிப்பை கைது செய்தனர்.

ஆனால் ஜாமீனில் வெளியில் வந்து தலைமறைவான அவர் மீண்டும் தனது கொடூர செயல்களை செய்ய தொடங்கினார். பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எனது பெயரில் போலி கணக்கை திறந்து எனது போன் நம்பரை பதிவிட்டு அதில் நான் கால்கேர்ள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்து அக்கணக்கை முடக்கினேன். ஆனால் மீண்டும் புதிய கணக்கை தொடங்கி திலிப் என்னை சித்ரவதை செய்து வருகிறார். சமூக வலைதளத்தில் சில நிமிடங்களில் கணக்கைத் திறந்துவிடுகின்றனர்.

இதனால் வாட்ஸ் அப்பில் தினமும் ஏராளமான மெசேஜ் மற்றும் போன் அழைப்புக்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி வெளியில் வருவது என்று தெரியாமல் இருக்கிறேன் என்று கண்ணீர் விட்டுள்ளார்.

இதோடு இளம்பெண்ணின் அத்தைக்கும் தினமும் 25 முறை என போன் செய்து தொந்தரவு கொடுத்து வருகிறார். திலிப் சிம்கார்டை அடிக்கடி மாற்றுவதால் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

From around the web