கூட்டணி ஒகே.. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இருக்கே!!

 
கூட்டணி ஒகே.. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இருக்கே!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் எதிர்வரும் சட்ட மன்ற தேர்தலை இணைந்து சந்திக்க காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கை அளவில் முடிவு செய்துள்ளன. ஆனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி தீரவில்லை. காங்கிரசுக்கு 92 தொகுதிகளை ஒதுக்க சிபிஎம் முன்வந்துள்ளது. காங்கிரஸோ 100 க்கு மேல் கிடைத்தால் தான் கவுரவம் என கருதுகிறது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள புர்புரா ஷெரிப் புரவலர் பிர்சாடாஅபபாஸ்  சித்திக் கட்சி இந்திய செக்குலர் முன்னணிக்கு தங்கள் பங்கில் இருந்து  தொகுதி ஒதுக்க சிபிஎம் தயாராக உள்ளது. 

காங்கிரசும் தனது  பங்கில் இருந்து தொகுதிகளை சித்திக் கட்சிக்கு தர வேண்டும் என சிபிஎம் கூறுகிறது.  பிப்ரவரி 28 அன்று கூட்டணியின் பேரணியை நடத்திக்காட்ட சிபிஎம் திட்டமிட்டுள்ளது. பாஜக பேரணி பிப்ரவரி 6 நடைபெற்றது.  மமதா பானர்ஜி 11 தேர்தல் பிரச்சார கூட்டங்களையும் நடத்திவிட்டார். 

 வது மாற்று அரசியல் சக்தி தங்களது அணி என காட்டிக்கொள்ள காங்கிரசும் மார்க்ஸிஸ்டும்  போராடுகின்றன. காங்கிரஸ் அலை , சிபிஎம் அலை என இப்போது ஏதும்  இல்லை, ஜனவரி 31  க்குள் தொகுதி பங்கீட்டை முடித்து  இந்நேரம் தேர்தல் பிரச்சாரம் தொடக்கி இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் முணுமுணுக்கிறார்கள். தாமதம் பாதகமான விளைவுகளை உண்டாக்கும் என சிபிஎம் தலைவர்கள் குமுறுகிறார்கள். மேற்குவங்கத்தில் கூட்டணியாக இருந்து கேரளாவில் எதிரிகளாக களமிறங்குவது  காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு வித்தியாசமான சவாலாக  உள்ளது. ஆட்சியை தக்கவைக்க மம்தாவும்,,. எப்படியாவது கைப்பற்றியே தீருவது என்ற வெறியில் பாஜகவும்  தீயாக வேலை செய்கின்றனர்.

-வி.எச்,கே,.ஹரிஹரன்

A1TamilNews