பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரை வெளுத்தெடுத்த உறவினர்கள்..!

 
Guntur

ஆந்திராவில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஒட்டிசெரு கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், தன்னிடம் ஆசிரியர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்குச் சென்று மாணவி கூறிய ஆசிரியரை திடீரென கடுமையாகத் தாக்கினர். அப்போது அவர்களிடம் அந்த ஆசிரியர் நான் மாணவியிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என முறையிட்டார். மேலும் மாணவியைச் சரியாகப் படிக்கவில்லை என்பதால் நான் அவரை கண்டித்தேன் என கூறினார்.

ஆனால், அவர்கள் அதைப்பற்றியும் கேட்காமல் ஆசிரியரைக் கடுமையாகத் தாக்கினர். அப்போது தடுக்க வந்த மற்ற ஆசிரியர்களையும் மாணவியின் உறவினர்கள் தாக்கினர்.

இந்த நிகழ்வு குறித்து அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். பிறகு மாணவியிடமும், ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web