மரண அடி வாங்கிய கம்யூனிஸ்டுகளின் சுய பரிசோதனை! முடிவு என்ன தெரியுமா?

 
Communist Congress alliance

நடந்து முடிந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் காங்கிரஸ் அபபாஸ் சித்திக் கட்சி மூன்றும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது.  35 ஆண்டுகள் மேற்குவங்கத்தை ஆட்சி செய்த  சிபிஎம்  ஒரு இடத்தில் கூட ஜெயிக்காமல் இவ்வளவு மோசமான தோல்வியடையும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.அரசியல் நோக்கர்கள் மிரண்டு போனார்கள்.

மேற்கு வங்காள  மாநில சிபிஎம் கமிட்டி தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்தது. பாஜகவும்  திரிணாமூல் காங்கிரசும் வாக்காளர்களை  செங்குத்தாக பிரித்து இரு முனைகளாக்கி விட்டனர்..அமைப்பு மற்றும் அரசியல் ரீதியாக சிபிஎம் செயல்பாடு  மிக மோசமாக இருந்தது. கொள்கை, ஜனநாயகம், வாழ்க்கை மற்றும் வாழ்வாதார பிரச்னைகள், பின்னுக்கு தள்ளப்பட்டன. மதவாரியாக பிரிந்து நின்றது தான் தேர்தல் முடிவுக்கு   காரணம் என சொல்ல முடியாது. மாற்று அரசு அமைப்போம் என்று நாங்கள் விடுத்த அறைக்கூவல் நிராகரிக்கப் பட்டது.எங்களுடைய  கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. மக்களுக்கு சிபிஎம் காங்கிரஸ்  ஐ எஸ் எப்  கூட்டணி மீதும் கொள்கை மீதும் நம்பிக்கை ஏற்படவில்லை. 

பெங்காலிகளின் தன்மானம்,இந்திய  சுதந்திர போராட்டம்  இவைகளை பாஜக முன்னெடுத்து தீவிர பிரச்சாரம் செய்தது. ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு எதிரான நிலைமை இருந்தது. ஆனால் மம்தாவின் தீவிர பிரச்சாரத்தால் அது பாஜக வுக்கு எதிராக  மாறியது. அந்த சூழலில் மக்கள் மாநிலத்தில் நிலவிய ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இவைகளை மறந்து  பாஜவுக்கு சரியான எதிர்க்கட்சி திரிணாமூல் காங்கிரஸ் தான் என தேர்ந்தெடுத்தனர் . இவ்வாறு தோல்விக்கான காரணங்களை கணித்துள்ளது சி.பி.எம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுயபரிசோதனை சரியாகவே உள்ளது.  மம்தாவுடன் சேர்ந்தால் தான் மேற்குவங்கத்தில் இனி காங்கிரஸ் நிலைக்க முடியும். கேரளா முதல்வர் பினராயி விஜயன் போல புதியவர்களுக்கு இளைஞர்களுக்கும் கட்சியில் வாய்ப்பு அளித்தால் தான் சிபிஎம்  தாக்கு பிடிக்க முடியும். மோதல் அரசியலை கைவிட்டு இந்துக்கள் உட்பட எல்லா மதத்தினரையும் அரவணைத்து வளர்ச்சி நோக்கி   சென்றால் மம்தா பதட்டம் இல்லாமல் ஆட்சி நடத்தலாம்.  கட்சி தாவி களை மட்டுமே நம்பாமல்  அந்தந்த மாநில தலைவர்களை .உருவாக்கினால் தான் தேசியக்கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வர முடியும்.

-வி.எச்.கே.ஹரிஹரன்  

From around the web