முகக்கவசம் அணியாமல் கார் மீது அமர்ந்து சவாரி... சாலையில் போட்டோஷூட்... பரிசாக வழக்கு வாங்கிய மணப்பெண்!!

 
Pune

புனேவில் காரில் முன்பக்கம் அமர்ந்தவாறு மணப்பெண் ஒருவர் வருகை தர கேமிரா மேன் அதை வீடியோ எடுக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம், வித்தியாசமான முறையில் சினிமா பாணியில் வீடியோ எடுப்பது தற்போதைய டிரெண்டாக வைத்துள்ளனர். ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது, பறக்கும் விமானத்தில் திருமணம் செய்வது என புதுப்புதுசாக யோசிக்கின்றனர். அது போன்று மணமகள் ஒருவர் வித்தியாசமான முறையில் முயற்சித்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

சினிமா ஹீரோக்கள் காரின் முன்பக்கம் அமர்ந்தவாறு சண்டைக்காட்சியில் என்ட்ரி கொடுத்து அசத்துவார்கள். அதுபோல் புனேவில் மணப்பெண் ஒருவர் காரின் முன்பக்கம் அமர்ந்தபடி திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்.

புனேவில் காரில் முன்பக்கம் அமர்ந்தவாறு மணப்பெண் ஒருவர் வருகை தர கேமிரா மேன் அதை வீடியோ எடுக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வழியில் பைக்கில் சென்ற ஒருவர் இந்த வீடியோவை தனது மொபைலில் எடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதை பார்த்த போக்குவரத்து போலீசார்  மோட்டர் வாகன சட்டத்தின் விதிமீறல் என்று நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அந்த பெண் பொது இடத்தில் மாஸ்க் அணியாமல் இருந்ததால் கொரோனா ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ புனே - சாஸ்வத் சாலையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணமகள் மற்றும் இந்த வீடியோவை எடுத்த கேமிரா மேன் மீது . மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், மராட்டிய கொரோனா  ஒழுங்குமுறைச் சட்டத்தின்  கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

From around the web