பிரதமர் மோடியை பதவி விலகச் சொல்லி மார்க் சக்கர்பர்க்கிடம் கோரிக்கை?

 
பிரதமர் மோடியை பதவி விலகச் சொல்லி மார்க் சக்கர்பர்க்கிடம் கோரிக்கை?

கொரொனா இரண்டாம் அலை மிகக்கடுமையாக இந்தியாவை பாதித்துள்ள நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்து நாலாப் பக்கங்களிலிருந்தும் குரல்கள் எழுகிறது. வெளிநாட்டு ஊடகங்கள் பிரதமர் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று கருத்துக்கள் தெரிவிக்கிறது.

உள்நாட்டிலும் பிரதமர் மோடி தேர்தலிலும், தேர்தல் பேரணியிலும் கவனம் செலுத்தினாரே ஒழிய கொரோனாவை பாதிப்புகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ResignModi என்ற ஹேஷ்டேக்கும் சமூகத்தளத்தில் பிரபலமாகி வருகிறது. பல நெட்டிசன்கள் இந்த ஹேஷ் டேக்கை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கின் ஃபேஸ்புக் பக்கத்திலேயே பகிர்ந்து வருகின்றனர். 2015ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்த போது அவருடன் எடுத்துக் கொண்ட படங்களைப் பகிர்ந்து இருந்தார் மார்க்

Here are some of my favorite moments from Prime Minister Narendra Modi's visit today.

Posted by Mark Zuckerberg on Sunday, September 27, 2015

பிரதமர் மோடியின் வருகையின் போது என்னுடைய சில மகிழ்வான தருணங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார் மார்க். தற்போது அந்தப் படங்களுக்கான பின்னூட்டங்களில் Resign Modi என்று பதிவிட்டு வருகிறார்கள். இது வரையிலும் இந்த கமெண்டுகள் நீக்கப்படவில்லை.

From around the web