ரிமோட் மூலம் டிராக்டர் இயக்கும் கருவி: காரைக்கால் இளைஞர் கண்டுபிடிப்பு..!

 
Karikal

நூறடி தூரத்தில் நின்றுகொண்டு, ரிமோட் மூலம் உழவு டிராக்டரை இயக்கும் புதிய கருவியை காரைக்கால் இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஸ்வின் ராம். பி.இ ஆட்டோமொபைல் படித்துள்ள இவர், உழவுக்கான டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்தார் அஸ்வின் ராம். அப்போது, தனது அறிவை பயன்படுத்தி சில புதிய சாதனங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நீண்ட முயற்சிக்குப் பின், உழவுக்கான டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இதன்மூலம், உழவு டிராக்டரை ஆன் செய்து வயலில் இறக்கி விட்டு விட்டு, 100 அடி தூரத்தில் நின்றுகொண்டு ரிமோட் மூலமாக இயக்கலாம். டிராக்டர் சரியான பாதையில் செல்லாமல் வேறு பகுதிக்கு செல்லும் போது, தானாகவே அதன் இன்ஜின் ஆஃப் ஆகும் வகையில் அந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அஷ்வின் ராம் வடிவமைத்துள்ள இந்த புதிய சாதனம் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web