நம்பிக்கை தரும் ராகுல் காந்தியின் அசத்தல் பார்முலா!

ழையன கழிதலும் புதியன புகுதலும் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. அரசியலுக்கும் இது பொருந்தும். இந்த உண்மையை பின்பற்றாத கட்சிகளின் வளர்ச்சி தேக்கநிலை அடைகிறது. எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்கு, ராகுல் காந்தி சில அளவுகோல்கள் நிர்ணயித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கொரோனா பரவல் தொடர்வதால் 60 வயது தாண்டியவர்களுக்கு ' "நோ " சீட்... சிட்டிங் எம் எல் ஏ க்களில் 3 முறைக்குமேல் நின்றவர்களுக்கு " நோ சான்ஸ்". இரண்டுமுறை தோற்றவர்களுக்கு இடமில்லை. உள்ளூர்காரராக , முழுநேரத் தொண்டராக இருக்க வேண்டும்.
இவை அற்புதமான அளவுகோல்கள். திரும்ப திரும்ப அதே புள்ளிகள் அவர்களின் வாரிசுகள் மட்டுமே இடம் பிடிக்கும் வேட்பாளர் பட்டியல் புதுப் பொலிவு பெறட்டும். முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி க்கள் கொள்கைப் பிரச்சாரக் குழு தலைவர், தேர்தல் பணி பயிற்சியாளர், தலைவர்களின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளர், வாக்காளரை கவரும் மேடை பேச்சு மற்றும் பிற தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்.
கட்சி என்பது நதி போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தேங்கிய குட்டை போல ஆக கூடாது. இளைஞர்கள், புதிய யுக்திகள், புதிய சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தால் தான் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் புகழ் நீடிக்கும். ராகுல் பார்முலா காங்கிரஸ் வளர்ச்சிக்கு காலத்தின் கட்டாயம்.
-வி,எச்,கே, ஹரிஹரன்