முதலில் மாஸ்கப் போடுங்க... ஆவணத்தைக் காட்டுறோம்... போலீசை எச்சரித்து முகக்கவசம் அணியவைத்த இளைஞன்!

 
Karnataka

முகக்கவசம் அணியாமல் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரிடம் வாகன ஓட்டி ஒருவர் வாக்குவாதம் செய்து, அவரை முகக்கவசம் அணியவைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அந்த காவல் உதவி ஆய்வாளரை முகக்கவசம் அணியக்கூறி அவ்வழியாகச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், கன்னடத்தில் பேசி வாக்குவாதம் செய்தார்.

அவர் முகக்கவசம் அணியவில்லை என்றால் ஆவணங்களைக் காண்பிக்காதீர்கள் என மற்ற வாகன ஓட்டிகளை எச்சரித்ததும் உஷாரான காவல் உதவி ஆய்வாளர் உடனே முகக்கவசத்தை அணிந்துகொள்கிறார்.

From around the web