இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தும் வரும் சூழலில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

 
PM-Modi-meeting

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில் தினமும் 10 ஆயிரத்துக்கு கீழே பாதிப்பு ஏற்பட்டு கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை அடைந்து வந்த நேரத்தில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் மறுபடியும் காட்டுத்தீயாக பரவத் தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக தினமும் 1 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை, ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுக்க கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தடுப்பூசி பணிகள், மருத்து உட்கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

From around the web