வரும் 13-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..?

 
PM-Modi-chairs-meeting-with-top-govt-officials

தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.  

தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், மாநில முதல்வர்களுடன் வரும் வியாழக்கிழமை (ஜன. 13) காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையின் போது  தடுப்பூசி செலுத்தும் வேகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து  பிரதமர் மோடி விவாதிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web