பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகையும் ரத்து! காணொலியில் நிகழ்ச்சி - முதல்வர் ரங்கசாமி

 
Rangasamy

வரும் 12-ம் தேதி புதுச்சேரி வருவதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்படுவதாக காணொலி வாயிலாக பிரதமர் பங்கேற்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அகில இந்திய இளைஞர் திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை புதுச்சேரி அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்து விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.

இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 7,500 இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தற்போது கொரோனாவின் 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக நாடு முழுவதும் பரவி வருவதால் பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை பாஜக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.  வரும் 12-ம் தேதி புதுச்சேரி வருவதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்படுவதாகவும் காணொலி வாயிலாக பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

From around the web