திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் மன்னர் குடும்பத்திற்கே சொந்தம்!சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவில் . 2011ல் இந்தக் கோவிலில் ஆறு பாதாள அறைகள் இருப்பதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தனிக்குழு நியமிக்கப்பட்டு பாதாள அறைகள் திறக்கப்பட்டு விஷ்ணு பொற்சிலை, விலை மதிக்க முடியாத வைரங்கள், வைடூரியங்கள், ஏராளமான நகைகள், தங்க நாணயங்கள், தங்கக்கிரீடங்கள் என சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே ஒரு அறை மட்டும் இன்னமும் திறக்கப்படவில்லை. ஆன்மிக ரீதியிலான
 

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் மன்னர் குடும்பத்திற்கே சொந்தம்!சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவில் . 2011ல் இந்தக்  கோவிலில் ஆறு பாதாள அறைகள் இருப்பதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

தனிக்குழு நியமிக்கப்பட்டு  பாதாள அறைகள் திறக்கப்பட்டு விஷ்ணு பொற்சிலை, விலை மதிக்க முடியாத வைரங்கள், வைடூரியங்கள், ஏராளமான நகைகள், தங்க நாணயங்கள், தங்கக்கிரீடங்கள் என சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே ஒரு அறை மட்டும் இன்னமும் திறக்கப்படவில்லை. ஆன்மிக ரீதியிலான கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியதால் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே இந்த கோவிலை திருவாங்கூர் சமஸ்தான அறக்கட்டளையிடம் இருந்து கேரள மாநில அரசு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி திருவனந்தபுரம் வந்து பத்மநாபசாமி கோவிலில் 35 நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் படி நேற்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. பத்மநாபசாமி கோயிலில் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு வந்த மன்னர் குடும்பமே ஏற்று நடத்தும்.

கோவிலை நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட்டு வரையறுத்துள்ள புதிய வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாக குழு அமைக்கப்படும். நிர்வாக குழுவில் 5 உறுப்பினர்கள், ஆலய அறங்காவலர் ஒருவர் மற்றும் மத்திய, மாநில அரசு நியமிக்கும் அதிகாரிகள் இடம் பெற வேண்டும். 8 பேர் கொண்ட ஆலோசனை குழுவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

A1TamilNews.com

From around the web