ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்! மேற்கு வங்காள பரிட்சையில் வெற்றி பெறப்போவது யார்?

 
Modi-Mamata

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நந்திக்ராம் தொகுதியில் தோற்றுப்போனார்,  ஆனால் அவரது கட்சி பெரும்பான்மைபெற்றதால் மாநில முதல்வராக பதவி ஏற்றார். ஆனால பதவியில் நீடிக்க 6 மாதத்துக்குள் எம் எல் ஏ  ஆக வேண்டும். கொரோனா காரணமாக இடைத்தேர்தல் இழுபறியாகவே இருந்தது. ஒருவழியாக இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 30ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை அறிவித்து விட்டது.

மம்தா பானர்ஜி பாவணிப்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் களம் இறங்கப்போவது இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது.தவறினால் சிபிஎம் அரசியல் அடையாளம் தொலைந்து விடும்.

அபபாஸ் சித்திக் கட்சி தனது இருப்பை வெளிப்படுத்த தனித்து நிற்கும். மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை செருப்பு துடைப்பம் கருப்பு கொடிகளை வீசி துரத்திய மம்தா கட்சியை  காங்கிரஸ் கட்சி   தொண்டர்கள் ஆதரிப்பார்களா?  சிபிஎம் கட்சியையே மீண்டும் ஆதரிப்பார்களா? அபபாஸ் கட்சி வாக்குகள் யாருக்கு ?

மேற்குவங்க சட்டசபை இடைத்தேர்தல் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் உண்மையான  பலத்துக்கும்  ஒற்றுமைக்கும் ஒரு சோதனையாக அமையும்.

-வி.எச்.கே. ஹரிஹரன் 

From around the web