OPPO, REAL ME போன்களுக்கான வாரன்ட்டி நீட்டிக்கப்படுகிறது!
கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கப்படுவதற்கும் நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் நடமாட முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஓப்போ போன்களுக்கான வாரன்ட்டி முடிவடைபவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு வாரன்ட்டிகள் நீட்டிக்கப்படுகின்றன. சார்ஜர், டேட்டா கேபிள், இயர்போன், பேட்டரி, ஸ்கிரீன் மாற்றம் மற்றும் முழு சேதாரப் பாதுகாப்பு இவை அனைத்தும் வாரண்ட்டியில் அடங்கும் என ஓப்போ நிறுவனம் அறிவித்துள்ளது. ரியல்மி வாடிக்கையாளர்களின் வாரன்ட்டி மார்ச் 20-
Mar 28, 2020, 15:30 IST
கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கப்படுவதற்கும் நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் நடமாட முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஓப்போ போன்களுக்கான வாரன்ட்டி முடிவடைபவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு வாரன்ட்டிகள் நீட்டிக்கப்படுகின்றன. சார்ஜர், டேட்டா கேபிள், இயர்போன், பேட்டரி, ஸ்கிரீன் மாற்றம் மற்றும் முழு சேதாரப் பாதுகாப்பு இவை அனைத்தும் வாரண்ட்டியில் அடங்கும் என ஓப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.
ரியல்மி வாடிக்கையாளர்களின் வாரன்ட்டி மார்ச் 20- ஏப்ரல் 30க்குள் முடிவடைகிறது. REAL ME பயனர்களுக்கான வாரண்ட்டி மே31 வரை நீட்டிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
