வீட்டில் கழிப்பறை இல்லையா? அப்ப வேட்புமனு தள்ளுபடி தான்!!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராம இல்லம்தோறும் கழிப்பறை கட்டாயம் ஆக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் அஹமதாபாத் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் சிங்கார்வ தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கரீனா படேல் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
கரீனா படேல் தனது வேட்பு மனுவுடன் இருப்பிட சான்றிதழாக ஆதார் அட்டையை இணைத்து இருந்தார். அதில் அவரது முகவரி 504 படேல் வாஸ்,, கன்ப 2 ,, டஸ்கரோய் தாலுகா என இருந்தது. ப்ளஸ்டூ படித்த கரீனா படேல் ரூ 15 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, நரோடா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ரூ 10 பெருமானை சுவ் கார் இத்தனைக்கும் அதிபதி. வேட்புமனுவில் தனது முகவரி என காட்டிய இல்லத்தில் கழிப்பறை இல்லாததால் இவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. வேட்புமனு பரிசீலனையில் போது வீட்டில் கழிப்பறை இல்லை என்பதை எழுத்துமூலம் வாங்கிவிட்டார் தேர்தல் அதிகாரி.
குஜராத் மாநிலத்தில் 92 . 46 % கிராமங்கள் திறந்தநிலை கழிப்பறை இல்லாதவை என மத்திய அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. லட்சாதிபதியாக இருந்தும் சொகுசுக்கார் மாடிகுடியிருப்பு தங்கநகைகள் இருந்தும் வேட்புமனுவில் காட்டிய தனதுவீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தார் அம்மணி கரீனா படேல். வேட்பாளர் தேர்வில் மட்டுமல்ல, வேட்புமனு நிரப்புவதிலும் விதிகளை பின்பற்றுவதிலும் மிக்க கவனம் தேவை என்பது உள்ளாட்சி வேட்பாளர்களுக்கு குறிப்பாக பாஜக அல்லாத வேட்பாளர்களுக்கு இந்த சம்பவம் உணர்த்துகிறது.
-வி.எச்.கே. ஹரிஹரன்
A1TamilNews