இந்தியாவில் உருமாறிய கொரோனா வகைகளுக்கு புதிய பெயர்கள்... உலக சுகாதார அமைப்பு

 
Variant-Corona

டெல்டா, கப்பா என இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பி.1.617 வகை வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன.

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு டெல்டா, கப்பா என கிரேக்க எழுத்துகளை உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் கொரோனாவுக்கு பீட்டா என்றும் பிரேசில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு காமா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உருமாறும் கொரோனாவைக் கண்டுபிடிக்கும் நாட்டின் பெயரை சூட்ட எதிர்ப்பு எழுந்தால் உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web