பாஜக அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும் - நவ்ஜோத் சிங் சித்து

 
sidhu

பாஜக அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து கூறியுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். பெரோஸ்பூர் அருகே விவசாயிகள் மறியல் போராட்டத்தால் அவரது கார் செல்ல முடியவில்லை. பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்து டெல்லி திரும்பினார்.

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் சுமார் 15 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது. பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாக பஞ்சாப் அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து கூறியதாவது, “பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி 70,000 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் 500 பேர் மட்டுமே வந்திருந்தனர். பிரதமர் அவமானத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்.

பிரதமர் மோடி பாஜகவின் பிரதமர் மட்டுமல்ல, அவர் இந்தியாவின் பிரதமர். அவரின் உயிருக்கு பஞ்சாபில் அச்சுறுத்தல் இருந்ததாக கூறி, பஞ்சாபியத்தை அவமதிக்க முயற்சிக்கின்றனர். பஞ்சாபில் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதை பற்றி பாஜகவுக்கு தெரியும். எனவே, அவர்கள் பிரதமரின் பாதுகாப்பு குறித்து அரசியல் செய்து வருகின்றனர். பாஜக அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும்.” என்று கூறினார்.

From around the web