மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

 
Navy

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியக் கடற்படையில் உள்ள ஒரே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சக்ராவின் குத்தகைக் காலம் முடிவடைந்ததால் அந்தக் கப்பல் ரஷியாவுக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் அகுலா 2 என்ற நீர்மூழ்கிக் கப்பலை, இந்தியா கடந்த 2012-ம் ஆண்டு 10 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருந்தது. 8 ஆயிரத்து 140 டன் எடை கொண்ட அந்தக் கப்பல் ஐஎன்எஸ் சக்ரா 2 என்ற பெயருடன் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாப்பதிலும், சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும் ஐஎன்எஸ் சக்ரா நிகரற்று விளங்கியது. இந்த நிலையில் இந்தக் கப்பலில் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாக இதன் குத்தகை காலம் நீட்டிக்கப்படாததால் தற்போது இந்தக் கப்பல் மீண்டும் ரஷியாவுக்கே திரும்பிச் செல்கிறது.

இந்நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய கடற்பகுதியில் சீன போர் கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கடற்படையை வலுப்படுத்தவும் பிராஜக்ட்-75 என்ற திட்டத்தின் மூலம் 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க பாதுகாபு அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது.

மேலும் இதற்கான திட்ட கோரிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு தளவாட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுனங்கள் உள்நாட்டில் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.   

மராட்டியத்தை சேர்ந்த மசகன் டக் மற்றும் எல் & டி என்ற தனியார் கட்டுமான நிறுவனங்கள், 5 வெளிநாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து விரைவில் பணியை துவக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

From around the web