பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை - ஒன்றிய சுகாதாரத்துறை

 
Vaccination

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. இதேபோல் ஜனவரி 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும்.

முதல்கட்டமாக மருத்துவப்பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் அவசியம் இல்லை என்று ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மருத்துவரின் ஆலோசனை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web