தேசிய அரசியலுக்குச் செல்லும் மமதா பானர்ஜி! மோடியா? லேடியா?

 
Abhishek Banerjee

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் 33 வயதான அபிஷேக் பானர்ஜி மேற்கு வங்காள அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்பி ஆன இவர் திரிணாமூல் காங்கிரஸ் தேசிய இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். சட்டமன்றத் தேர்தல் யுக்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் நெருக்கமாக ஒத்துழைத்து 3 வது முறையாக மம்தா மேற்கு வங்க முதல்வராக கடுமையாக உழைத்தவர்.

அபிஷேக் பானர்ஜியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக மே 5 அன்று அறிவித்தார் மம்தா, அபிஷேக் வசம் ஒப்படைத்த பணிகளை 100  க்கு  100  வெற்றிகரமாக முடித்து விட்டார். எனவே தான் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரதா முகர்ஜி பாராட்டினார். நடிகர் சயனி கோஷ்  இளைஞரணி புதிய தலைவராக நியமிக்க பட்டார்.

3 முறை மேற்குவங்க முதல்வர் ஆனபிறகு டெல்லி தேசிய அரசியலில் மீண்டும் கால் பதிக்கலாம் என மம்தா தீர்மானித்து விட்டதாகக் கூறப்படுகிறது. கூடவே அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இருக்கிறாரே. மாநில கட்சி, ஆட்சி எல்லாம் மருமகன் கையில் பத்திரமாக இருக்கட்டும் என மம்தா நினைத்து இருக்கலாம்.

மோடியை எதிர்க்க தன்னை விட்டால் ஆள் இல்லை என்பது மம்தாவின் நினைப்பு.  2024 க்குள் "பெடரல் பிரண்ட்"  பிரதமர் வேட்பாளர் என அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே , பாரூக் அப்துல்லா , சரத் பவார்  மூலம்  அறிவிக்க சொல்லி விட்டு .. இந்தியா எங்கும்  பயணிக்கலாம்.. பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ்,  ராகுலை முன்னிறுத்து முன்னர், முதல் ரவுண்டு   ஆல் இந்திய டூர் முடித்து விடுவோம் என்பது தான் மம்தாவின் வியூகம்.

- வி.எச்.கே.ஹரிஹரன் 

From around the web