கொரோனாவை விட தலைக்கு மேல் சுற்றும் விசிறியை பார்த்தால் தான் பயம் வருகிறது... நோயாளி வெளியிட்ட வீடியோ!

 
கொரோனாவை விட தலைக்கு மேல் சுற்றும் விசிறியை பார்த்தால் தான் பயம் வருகிறது... நோயாளி வெளியிட்ட வீடியோ!

தனது தலைக்கு மேலே சுற்றும் மருத்துவமனையில் உள்ள மின்வசிறி மிகப் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவது போல உள்ளதாக நோயாளி ஒருவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை அனுமதிப்பதற்கு மருத்துவர்கள் திணறுகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த இளைஞர் இருக்கக்கூடிய படுக்கைக்கு மேலே சுற்ற கூடிய மின் விசிறி வித்தியாசமாக சற்று பயமுறுத்தும் வகையில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ள அந்த இளைஞர், எனக்கு இப்பொழுது கொரோனா வைரஸ் கண்டு கூட பயம் இல்லை. ஆனால், என் தலைக்கு மேல் இருக்கக் கூடிய மின் விசிறியை பார்த்தால் தான் பயமாக உள்ளது என பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.


 

From around the web