இந்திராகாந்தியின் 104-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை

 
Sonia-Gandhi-pays-tribute-to-former-Prime-Minister

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தியின் 104-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாளையொட்டி இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

From around the web