மனைவியின் ஆபாச வீடியோவை பார்த்த கணவன் தற்கொலை விவகாரம்; கள்ளக்காதலனுடன் பெண் கைது

 
Akhila-vishnu

கள்ளக்காதலனுடன் இருந்த மனைவியின் ஆபாச வீடியோவை பார்த்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்த விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விளப்பில் சாலை பகுதியை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 34), இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அகிலா (வயது 30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அகிலாவுக்கும், நெடுமங்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணுவுக்கும் (வயது 30) இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இது சிவபிரசாத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து மனைவியை பல முறை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலனுடனான தொடர்பை அவரது மனைவி கைவிடவில்லை. இந்த நிலையில் அகிலா, கள்ளக்காதலன் விஷ்ணு ஆகியோரின் ஆபாச வீடியோ வெளியானது.

இதை சிலர் சிவபிரசாத்திற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்து உள்ளனர். மனைவியின் ஆபாச வீடியோவை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். இதை தொடர்ந்து அவமானம் தாங்க முடியாமல் சிவபிரசாத் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந்தேதி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு, தனது சாவுக்கு மனைவி அகிலாவும், கள்ளக்காதலன் விஷ்ணுவும் தான் காரணம் என்று வீட்டு சுவரில் எழுதி வைத்து இருந்தார்.

இது தொடர்பாக விளப்பில்சாலை போலீசார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அகிலா, அவரது கள்ளக்காதலன் விஷ்ணு ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்ததும் கள்ளக்காதலர்கள் 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் 2 பேரையும் பல்வேறு இடங்களிலும் வலைவீசி தேடி வந்தனர். இருப்பினும் கடந்த 2 வருடமாக அவர்கள் போலீசில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 11-ந் தேதி எர்ணாகுளத்தில் வைத்து கள்ளக்காதலன் விஷ்ணுவை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். அகிலாவை கைது செய்ய முடியவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அகிலாவையும் ஸ்ரீகாரியத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவைர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

From around the web