நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..!

 
Puducherry

புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில், புதுச்சேரியில் கொரோனா காரணமாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும் பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்பு தொடர்ந்து நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

From around the web