பாஜக முன்னாள் அமைச்சர் பிரவின் போட்டே கல்லூரியில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!!

 
Pote-patil

அமராவதியில் முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் வர்ணம் பூச சென்ற 4 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர்

மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தின் பாஜப எம்.எல்.சியும் முன்னாள் அமைச்சருமான பிரவின் போர்டேவிற்கு சொந்தமான போட் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.

இந்த கல்லூரியின் நுழைவு வாயிலில் வர்ணம்பூசும்பணி இன்று மதியம் 12.30 மணியளவில் தொழிலாளிகள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  வர்ணம் பூசுவதற்காக இரும்பினால் ஆன ஏணியை அங்கு நிறுத்த 4 பேர் ஈடுபட்டனர்.

அப்போது ஏணி மின்கேபிள் வயரில் உரசியதால் மின்சாரம் அதில் பாய்ந்தது. இதனால் ஏணியை பிடித்து கொண்டிருந்த 4 பேரின் மிது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பலியாகி கிடந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் தனியார் கல்லூரி ஊழியர்களான அக்சய் சவார்கர் (வயது 25), கோகுல் வாக் (வயது 28), பிரசாந்த் சேலுகர் (வயது 30), சஞ்சய் தன்ட்நாக் (வயது 45) ஆகியோர் என்பது தெரியவந்தது. மின்சாரம் தாக்கி 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web