விதி யாரையும் விட்டு வைக்காது.. ‘ப்ளூ பிலிம் ஞாபகம் இருக்கா?’ சந்திரபாபு நாயுடுவை விளாசித் தள்ளிய நடிகை ரோஜா!

 
Roja

எனக்கு தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா கூறியுள்ளார்.

ஆந்திரா சட்டமன்றத்தில் தன்னையும், தனது மனைவியையும் அவதூறு செய்துவிட்டதாக கூறி இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என சபதம் செய்துவிட்டு சந்திரபாபுநாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். பின்னர் நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில் கண்கலங்கினார்.

இதுகுறித்து நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா பேசுகையில், “பெண் பாவம் பொல்லாதது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் என்னை அநியாயமாக ஒரு ஆண்டு காலம் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் தடை விதித்தனர். பெண் என்றும் பாராமல் என்னை அவதூறு கேலி செய்தனர். அன்று சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு நாள் முழுவதும் வெயிலில் காத்திருந்தேன். கண்ணீர் வடித்தேன்.

இதற்கெல்லாம் ஒருநாள் சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டி வரும் என நினைத்தேன். அந்த நாள் இன்று வந்துவிட்டது. இன்னும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் உள்ளது. அதன் பிறகும் கூட அவர் வெற்றி பெறுவது, முதல்வராவது என்பது கனவில் கூட நடக்காது. எனவே கடவுள் அவரை வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் செய்து விட்டார் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.


இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான நடிகை ரோஜா வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,

“சந்திரபாபு... விதி யாரையும் விட்டு வைக்காது. அனைவரது கணக்கையும் சரியாக கணக்கு பார்த்து தீர்த்துவிடும். அன்று 72 வயதில் என்.டி.ஆரை நீங்கள் கலங்க செய்தீர்கள். இன்று 71 வயதிலேயே அதை நீங்களும் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். அதனால் தான் சொல்வார்கள் ‘நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பும் என்று’

தங்கள் மனைவி குறித்து பேசிவிட்டார்கள் என கலங்கும் நீங்கள் தான் அதிகாரத்தில் இருந்த போது ‘ரோஜா, ப்ளூ பிலிமில் நடிக்கிறார்’ என சொன்னீர்கள். எங்களுக்கு குடும்பம் இல்லையா? பிள்ளைகள் இல்லையா?

அதிகாரத்தில் இருந்த போது அனைவரையும் நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். விஜயா அம்மா, ஷர்மிளா அம்மா (ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மற்றும் சகோதரி) குறித்து நீங்கள் பேசியதை யாரும் மறந்து விடவில்லை.

இந்த நிலையில் உங்களது போலியான நீலிக் கண்ணீருக்கு யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள். எனக்கு தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்கு திரும்ப வாய்ப்பில்லை. அதற்கு காரணம் உங்கள் சபதம் தான். பை... பை...பாபு” என கூறியுள்ளார்.

From around the web