1 சதவீதம் பேர் சிகிச்சை பெற்றாலும் அது பெரிய எண்ணிக்கையே.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை!!

 
sarat-chandra

ஒரு சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அது பெரிய எண்ணிக்கையாகவே இருக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் மருத்துவரான சரத் சந்திரா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கொரோனா பரவலை தவிர்க்கும் வகையில் முக கவசம் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை தீவிரமுடன் நாம் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

ஒரு சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அது பெரிய எண்ணிக்கையாகவே இருக்கும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

அதனால், லேசான பாதிப்பு என நினைத்து விட கூடாது. நம்முடைய சுகாதார பணியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும். நமது பாதுகாவலர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பது நம்முடைய பொறுப்பு ஆகும். நமது மருத்துவர்கள் பாதிக்கப்பட்டால் அதனை நாம் தாங்கமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web