நிலத்தை விற்று கனவுகளை நோக்கி ஓடும் இந்தியர்கள் – 3

மரபணு மாற்ற விதைகள் என்பதை வலுக்கட்டாயமாக அரசுகள் திணிப்பதும் அதற்கான பிரச்சாரங்களை திணிப்பதும் வெறும் அறிவியல் பிரச்சாரம் என்று சொல்கிறார்கள். அறிவியல் எல்லோருக்கும் பொதுவானது தான். மாட்டு வண்டியும் அறிவியல்படி அமைக்கப்படுவதுதான் ராக்கெட்டும் அறிவியல் விதிப்படி அமைக்கப்படுவது தான். ஆனால் ராக்கெட் பல தொழில் நுட்பங்களை கொண்டு சிக்கலான பல கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கருவி. தொழில் நுட்பமும் அறிவியலும் வேறு வேறு. அறிவியல் கோட்பாடுகள் பொது வெளியில் எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பது. ஆனால் தொழில்
 

நிலத்தை விற்று கனவுகளை நோக்கி ஓடும் இந்தியர்கள் – 3

நிலத்தை விற்று கனவுகளை நோக்கி ஓடும் இந்தியர்கள் – 3மரபணு மாற்ற விதைகள் என்பதை வலுக்கட்டாயமாக அரசுகள் திணிப்பதும் அதற்கான பிரச்சாரங்களை திணிப்பதும் வெறும் அறிவியல் பிரச்சாரம் என்று சொல்கிறார்கள். அறிவியல் எல்லோருக்கும் பொதுவானது தான். மாட்டு வண்டியும் அறிவியல்படி அமைக்கப்படுவதுதான் ராக்கெட்டும் அறிவியல் விதிப்படி அமைக்கப்படுவது தான்.

ஆனால் ராக்கெட் பல தொழில் நுட்பங்களை கொண்டு சிக்கலான பல கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கருவி. தொழில் நுட்பமும் அறிவியலும் வேறு வேறு. அறிவியல் கோட்பாடுகள் பொது வெளியில் எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பது. ஆனால் தொழில் நுட்பம் காப்புரிமை பெறப்பட்டு நிறுவனங்கள் வழியே விலைக்கு கிடைப்பது.

அதனால் தொழில் நுட்ப மேம்பாடு என்பது பற்றிய பாரவைகளை சிலர் முன்னே பாய்ந்து ஓடுவதையும் இன்னொருவர் ஊர்ந்து போவதையும் மேல் கீழ் என்று பார்க்கிற பொதுப் பார்வை ஒரு அறிவியல் படிப்பவனுக்கு இருக்காது.

பல தொழில் நுட்பங்கள் மனிதனின் கைக்கே எட்டாத பல விசயங்களை சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பது மறுக்க முடியாது. ஆனால் இந்த தொழில்நுட்பங்களின் லாப நோக்கையும் பக்க விளைவுகளையும் சேர்த்தே பேசுவது தான் அறிவியலின் முக்கியமான அம்சம்.

இந்த மாத்திரையை சாப்பிட்டால் உங்கள் கால் வலி சரியாகும், எதற்கும் கிட்னியை ஒரு முறை பரிசோதிக்கனும் என்று மருத்துவர் சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும்? இத்தகைய முரண்களின் அடிப்படையில் நடக்கக் கூடிய விவாதங்களே அறிவியலை முழுமையான ஒரு படிப்பாக்கும்.

மரபணு பயிர்களின் வரலாற்றை நாம் கொஞ்சம் கூர்ந்து பார்க்க வேண்டும். வேளாண்மை துவங்கி இருபதாயிரம் வருடங்கள் என்று தோராயமாக கணக்கிடுகிறார்கள். இந்த இருபதாயிரம் வருடங்களில் மரபினி மாற்றங்கள் பல இயற்கையாக நிகழ்ந்தவை. பல பயிர்கள் உண்ணத்தகாதவையாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் உண்ணக் கூடியதாக மாற்றியது இயற்கை.

அதே போல வெவ்வேறு சீதோசண நிலைகளில் மாற்றத்திற்கு உட்பட்டு ஒரு நாட்டில் விசமாக விளைந்த பயிர் இன்னொரு நாட்டில் மேம்படுத்தப்பட்டு உண்ணக் கூடிய தன்மையை அடைகிறது. அப்படியான செய்து பார்த்தல் வழியாக நாம் நமது மரபு வழிப் பயிர்களைக் கண்டடைந்தோம். அதில் மருத்துவத் தாவரங்களையும் சேர்க்க வேண்டும்.

இந்த இருபதாயிரம் வருடங்கள் நடந்த இந்த மாபெரும் பன்மை தன்மையுள்ள விதைகள் விளைச்சல் சுவை போன்றவை இப்போது மரபியல் என்கிற துறை தோன்றி இருநூறு வருடங்களில் பாய்ச்சல் நிகழவில்லை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இப்போது நடந்துள்ள தொழில் நுட்ப வளர்ச்சி 0.00001சதவீதம் என்று கூட சொல்ல முடியாது.

இன்று நடக்கிற ஒட்டு பிட்டு வேலைகள் எல்லாம் வரலாறு தோறும் நடந்து வந்தவை. ஆனால் மரபின் மாற்றப்பட்ட பயிர்கள் உற்பத்தியைப் பெருக்கும் என்பது இன்று வரை தொன்மமே. ஏனென்றால் இவை ஒரு முறை ஒரு சூழலில் வென்று மறுமுறை வேறு சூழலில் தோற்றவை.

இததகைய சூழலில் உணவு பாதுகாப்பு உடல் நலத்தைப் பற்றிய பார்வை முக்கியமானது. இயற்கையின் தகவமைப்பு சிக்கல்கள் ஒரு புறம் மறு புறம் இவற்றின் ’best quality’ கோசங்கள் உண்மை இல்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த உயிரியல் விஞ்ஞானிகள் குழு மரபணு மாற்றுப் பயிர்கள் பாதுகாப்பற்றவை என்று சொல்லிவிட்டது. ஆனாலும் சோதனை வேண்டும் செய்து பார்க்கிறோம் என்று அரசியல்வாதிகள் குதிக்கிறார்கள். இன்னைக்கு உற்பத்தி செய்த பொருளுக்கே ஒழுங்காக விலை கொடுக்க துப்பில்லாத அரசாங்கங்கள் உயர் தொழில் நுட்பம் என்பதை விவசாயம் கார்ப்பரேட் மயமாக்கும் பொருட்டு கொண்டு வருகிறார்கள்.

தொடர்வோம்…

– இளங்கோ கல்லணை

நிலத்தை விற்று கனவுகளை நோக்கி ஓடும் இந்தியர்கள் – பகுதி 2

A1TamilNews.com