கடன் வாங்கி கட்சி நடத்தும் தலைவர் யார் தெரியுமா? இந்தியாவில் தான்!

நிதி பற்றாக்குறை காரணமாக மத சார்பற்ற ஜனதா தளம் இடைத்தேர்தலில் போட்டியிடாது என முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்து இருந்தார். ஆளும் பாஜக வுக்கு மறைமுகமாக உதவிடவே இந்த அறிவிப்பு என காங்கிரசார் குற்றம் சாட்டினர்...குழப்பமே வேண்டாம். நாங்கள் எதிர்வரும் தேர்தல்களில் கண்டிப்பாக போட்டியிடுவோம். 2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ் பாஜக வுடன் கூட்டணி சேரும் என்பதை தொண்டர்கள் நம்ப வேண்டாம். 224 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். பணம் பற்றி கவலைப்படாதீர்கள், கட்சிப்பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவோம். என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டமாக அறிவித்தார். நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்,ஆலோசனை தருகிறேன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய என்னால் இயலாது, என தேவகவுடா தெரிவித்தார். தேர்தல் வியூகத்தில் தேர்ந்தவராகவும், ஒரு தேசியக்கட்சி தலைவராகவும்,
பிரதமராகவும் இருந்த தேவகவுடா ஒரு மாநில, ஒரு குறிப்பிட்ட இன தலைவராக தன்னை சுருக்கிக்கொண்டார். பிரதமராக இருந்தபோது ,வடகிழக்கு மாநிலங்கள் ,அந்நிய முதலீடுகள் குறித்து நல்ல முடிவுகள் எடுத்த தேவகவுடா அதை நாட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்ய தவறிவிட்டார். பிரதமர் பதவி இழந்தபிறகு மாநில அரசியலே போதும் என்ற நிலைக்கு சென்றுவிட்டார். கடன் வாங்கி கட்சி நடத்தவேண்டிய நிலை ஜேடிஎஸ் க்கு இன்று இல்லை. அரசியல் கட்சி நடத்துவது என்ன தொழிலா கடன் வாங்கி நடத்த? ஜாதி, குடும்பம் என்ற வட்டத்துக்குள் நடத்தும் கட்சிகள் நாளடைவில் காணாமல் தான் போகும். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு சவாலாக உள்ளது ஜேடிஎஸ் மட்டுமே. முன்னாள் சோசலிஸ்ட் தேவகவுடா நினைத்தால் தேசிய அளவில் ஜனதா பரிவாரங்களை ஒன்று சேர்க்க முடியும்.
- வி.எச்.கே.ஹரிஹரன்
A1TamilNews