டெல்டா மரபணு மாற்ற வைரஸ்... நினைப்பதை விட மிகவும் கொடூரமானது - மருத்துவர்கள் எச்சரிக்கை

 
Delta

இந்தியாவில் கொரோனா 2-ம் அலையால் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணமான டெல்டா மரபணு மாற்ற வைரஸ், நினைப்பதை விட மிகவும் கொடூரமானதாக இருக்கலாம் என டாக்டர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா தொற்று முதன் முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் மூன்ற உப ரகங்களாக இது பிரிந்தது. இவற்றில் பி.1.617.2  என்ற ரகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என்று பெயர் சூட்டியது. பி.1.617.1 ரகத்திற்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், டெல்டா மரபணு மாற்ற வைரஸ், இந்தியா கொரோனா பரவல் உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களையும் கவலையளிக்கும் ரகம் என்று  உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருந்தது.  இந்த மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டுமே கவலையளிக்கும் ரகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இருந்தது. இதன் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளதால் இதை கவலையளிக்கும் ரகமாக வகைப்படுத்தியுள்ளது.

பல நாடுகளுக்கு பரவியுள்ள இந்த டெல்டா வைரஸ் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறி இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 2-ம் அலையால் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணமான டெல்டா மரபணு மாற்ற வைரஸ், நினைப்பதை விட மிகவும் கொடூரமானதாக இருக்கலாம்  என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் டெல்டா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த அறிகுறிகளுடன், காது கேளாமை, தீவிர வயிற்றுக் கோளாறுகள், உறுப்புகள் சிதையும் அளவுக்கான ரத்தம் உறைதல் ஆகிய புதிய விளைவுகளும் தோற்றுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.  

பிரிட்டனில் முதலில் காணப்பட்ட ஆல்பா மரபணு மாற்ற வைரசை விட இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் 50 சதவீத அதிக தொற்றும் திறனுடையது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா, காமா ரக மரபணு  மாற்ற வைரஸ் தொற்றின் போது இது போன்ற மிகவும் ஆபத்தான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

From around the web