டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி!!

 
Arvind-Kejriwal

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்க உள்ளது. இதற்காக, அக்கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


 

From around the web