புதுவையில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் ஊரடங்கு! தமிழிசை அதிரடி உத்தரவு !!

 
புதுவையில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் ஊரடங்கு! தமிழிசை அதிரடி உத்தரவு !!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தையும் வரும் 3-ம் தேதி வரை திறக்க அரசு தடை விதித்து இருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் ஏற்கெனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டித்துள்ள நிலையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல் மே 10 (திங்கள்கிழமை) வரை ஊரடங்கு நீட்டித்துள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

From around the web