70 ஆண்டுகளில் காங்கிரஸ் உருவாக்கியது... 7 ஆண்டுகளில் விற்ற பாஜக; ராகுல் காந்தி விமர்சனம்

 
RahulGandhi

70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை பாஜக கடந்த 7 ஆண்டுகளில்  விற்றுவிட்டது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது மும்பை பயங்கரவாத  தாக்குதல் நடந்தது. அந்த தாக்குதலுக்குப்பின் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன.

ஆனால், புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் பேசவில்லை.

காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை பாஜக கடந்த 7 ஆண்டுகளில்  விற்றுவிட்டது.

பாஜக தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் ஏதும் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து ஊடகங்கள் விமர்சித்தன. அதற்கு முரணாக ஊடகங்கள் இப்போது செயல்படுகின்றன” என்றார்.

From around the web